மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜனை இந்தியா ஏற்றுமதி செய்கிறது என வெளியாகும் தகவல்கள் போலி-மத்திய அரசு
கொரோனா காலத்தில் இந்தியா மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜனை ஏற்றுமதி செய்கிறது என வெளியாகும் தகவல்கள் போலியானவை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பொதுவாக ஆக்சிஜன் இரண்டு விதமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரை 9884 மெட்ரிக் டன்கள் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதே காலகட்டத்தில் 12 மெட்ரிக் டன் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. அது நாட்டின் மொத்த உற்பத்தியில் பூஜ்யம் புள்ளி 4 சதவிகிதம் மட்டுமே.
கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் தேவையில் மத்திய அரசு அலட்சியமாக இருக்கிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டிய நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Comments