பெண் எஸ்பிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை புகார் விவகாரம்- சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு

0 1486
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பெண் எஸ்பியின் புகார் குறித்து நடத்தப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கை தனி நீதிபதி கண்காணித்து வருவதால், மேற்கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கு அவசியம் இல்லை எனகூறி, வழக்கு முடித்துவைத்து உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments