உ.பி.,யில் ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்; இரவு பகல் பாராமல் நீண்ட வரிசையில் காத்திருப்பு
நாடு முழுவதும் பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிலிண்டர்களை வாங்கி செல்கின்றனர்.
லக்னோவில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில், ஆக்சிஜனுக்கு ஏற்பாடு செய்தால் தான் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க முடியும் என கூறப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதன் காரணமாக, நோயாளிகளின் உறவினர்கள், அங்குள்ள பல்வேறு பகுதிகளில் தனியார் ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் தொழிற்சாலைகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
இதனால் தல்கோத்ரா, நாதார்காஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் இடங்களில் பகல் இரவு பாராமல், மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Comments