”கொரோனா தடுப்பூசி மூலப்பொருள் ஏற்றுமதி தடையை கைவிட வேண்டும்” :அமெரிக்காவுக்கு இந்திய அரசு வேண்டுகோள்

0 1537
”கொரோனா தடுப்பூசி மூலப்பொருள் ஏற்றுமதி தடையை கைவிட வேண்டும்” :அமெரிக்காவுக்கு இந்திய அரசு வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடையை விலக்கிக் கொள்ளுமாறு இந்தியா அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளது.

உள்நாட்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், சுமார் 30 விதமான மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கு அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் தடை விதித்தது.

இதனால் தடுப்பூசி உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என சீரம் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. இது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனுடன் பேசிய நிலையில், இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்துவும் அங்குள்ள அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பூசிக்கான மூலக்கூறு ஏற்றுமதிதைய அனுமதி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments