மே 1 முதல் வெளிச்சந்தையில் கொரோனா தடுப்பு மருந்து விற்க அனுமதி
மே 1 முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெளிச்சந்தையில் விற்க அரசு அனுமதித்துள்ள போதிலும் மருந்துக் கடைகளில் கிடைக்காது என்றும், மருத்துவமனைகளிலும், தடுப்பூசி மையங்களிலும் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏதுவாக மே 1 முதல் வெளிச்சந்தையில் தடுப்பு மருந்தை விற்க அரசு அனுமதித்துள்ளது.
அதன்படி மாநில அரசுகள், மருத்துவமனைகள், பெரு நிறுவனங்கள் தடுப்பு மருந்தைக் கொள்முதல் செய்து பயன்படுத்தலாம்.
அவசரத் தேவைக்குப் பயன்படுத்தவே ஒப்புதல் வழங்கியுள்ளதால் மருந்துக்கடைகளில் கொரோனா தடுப்பு மருந்து விற்கப்படாது.
மருத்துவமனைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி நிலையங்களிலும் மட்டுமே கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments