10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என்ற உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை: பள்ளிக்கல்வித்துறை
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தப்படாது என்றும், மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்ற அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க ஏதுவாக மாநிலம் முழுவதும் பள்ளி அளவில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த தகவல் உண்மையில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை அவ்வாறு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. தவறான தகவலை வெளியிட்டு மாணவர்கள், பெற்றோர்களை குழப்ப வேண்டாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Comments