மேற்கு வங்கத்தில் கடைசி 2 கட்டத் தேர்தலை ஒன்றாக நடத்த மம்தா பானர்ஜி கோரிக்கை

0 5087

மேற்கு வங்கத்தில் கடைசி இரண்டு கட்ட வாக்குப்பதிவையும் ஒன்றாக்கி ஒரேநாளில் நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு வங்கச் சட்டப்பேரவைக்கு 5 கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், நாளை ஆறாம் கட்ட வாக்குப் பதிவும், ஏப்ரல் 26, 29 ஆகிய நாட்களில் முறையே ஏழாம் எட்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளன. இந்நிலையில் கொரோனா சூழலைக் கருத்திற்கொண்டு கடைசி இரண்டு கட்ட வாக்குப்பதிவையும் ஒன்றாக்கி ஒரே நாளில் நடத்த மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல்களை ஒன்றாக்குமாறு மம்தா விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments