அமெரிக்காவில் கருப்பினத்தைச்சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாயிட் கொல்லப்பட்ட வழக்கில் போலீஸ்காரர் டெரிக் சாவின் குற்றவாளி என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ஜார்ஜ் ஃப்ளாயிட் வழக்கு மின்னாபொலிஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனை விசாரிக்கும் 12 நீதிபதிகள் அடங்கிய குழுவினர், ஃப்ளாயிட் கொல்லப்பட்டது அமெரிக்க வரலாற்றில் கொடூரமான நிகழ்வு என்று குறிப்பிட்டனர். பின்னர் 45 சாட்சியங்களிடம் வாங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் ஃப்ளாயிட் வழக்கில் டெரிக் சாவின் குற்றவாளி என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இதனைத் தொடர்ந்து டெரிக்கின் ஜாமீனையும் நீதிபதிகள் ரத்து செய்தனர். ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற இளைஞரை கடந்த ஆண்டு டெரிக் உள்ளிட்ட சில போலீசார் கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த நிகழ்வு உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
Comments