ஏமன் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
ஏமன் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
அந்நாட்டிற்கு கடந்த மார்ச் 31ஆம் தேதி 3 லட்சத்து 60 ஆயிரம் டோஸ் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பு மருந்துகள் வந்து சேர்ந்த நிலையில், பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் பணி செவ்வாய்கிழமை தொடங்கியது.
சுகாதாரத்துறை அமைச்சர் பிலிப் டுயாமெல்லே முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட நிலையில், முன்களப்பணியாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் பல்வேறு நோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஹவுதி கிளர்ச்சி படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தடுப்பூசி போடப்படவில்லை என தெரியவந்துள்ளது.
Comments