2 ஆண்டுகளுக்கு பின் போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக விமானங்கள் மீதான தடையை நீக்கியது இந்தியா
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக விமானங்கள் மீதான தடையை இந்தியா நீக்கியுள்ளது.
இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்துத்துறை விடுத்துள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட 737 மேக்ஸ் ரக விமானங்கள் இந்தியாவில் தரையிறங்கவும், மேலும் இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கும் அவசியமாகக் கருதக்கூடிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் மேக்ஸ் ரக விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தவறும் பட்சத்தில் 1934ம் ஆண்டு விமானச் சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிவில் விமானப் போக்குவரத்துறை எச்சரித்துள்ளது.
முன்னதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட்டதால் மேக்ஸ் ரக விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
Comments