கொரோனா நோயாளிகளுக்காக தினசரி 400 டன் வரை ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தர தயாராக இருப்பதாக டாடா ஸ்டீல் அறிவிப்பு
கொரோனா நோயாளிகளுக்காக தினமும் 300 முதல் 400 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து தர தயாராக இருப்பதாக டாட்டா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்ஸிஜன் முக்கியமானது என்பதை தாங்கள் உணர்ந்துள்ளாக குறிப்பிட்டுள்ளது.
இதற்காக பல்வேறு மாநில அரசுகளுக்கு 300 முதல் 400 டன் வரை ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து தருவதற்கு தயாராக இருப்பதாகவும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றாக இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments