ஆக்ஸிஜன் தடையின்றி வழங்கப்படுதை மத்திய அரசு உறுதி செய்ய மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் மருத்துவ நோக்கங்களுக்காக ஆக்ஸிஜன் வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. அப்போது, ஆக்ஸிஜன் வழங்குவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் விலைமதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடும் என நீதிபதி கருத்துக் கூறினார்.
மேலும் மருத்துவ நோக்கங்களுக்காக தொடர்ந்து ஆக்ஸிஜன் வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணையின் போது ஆஜரான மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணைச் செயலாளர், டெல்லிக்கு தற்போது 378 டன் ஆக்ஸிஜன் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
Comments