ரெம்டெசிவிர் மருந்துக்கான இறக்குமதிக்கு வரியை தள்ளுபடி செய்தது மத்திய அரசு
கொரோனா தடுப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்துக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு ரெம்டெசிவர் மருந்து அதன் மூலப்பொருட்கள் மற்றும் ஆன்டிவைரல் மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பிற கூறுகள் மீதான சுங்க வரியை தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்த மருந்து அதிக அளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரெம்டெசிவருடன் அதனைத் தயாரிக்கப் பயன்படுத்தும் பீட்டா சைக்ளோடெக்ஸ்ட்ரின் மருந்தின் இறக்குமதி வரியையும் அக்டோபர் 31ம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளதாகவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.
Comments