ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: மும்பையை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி!

0 3892

மும்பை அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ரோஹித் சர்மா 44 ரன்கள் எடுத்தார். சூர்ய குமார்,இஷான் கிஷான்,ஜெயந்த் யாதவ் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 19.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவாண் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஸ்டீவன் ஸ்மித் 33 ரன்களும், லலித் யாதவ் ஆட்டமிழக்காமல் 22 ரன்களும் சேர்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments