தமிழ்நாட்டில் இன்று 10,986 பேருக்கு கொரோனா உறுதி : 48 பேர் உயிரிழப்பு

0 3365

மிழ்நாட்டில் மேலும், 10,986 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெருந்தொற்று பாதிப்பு வகைதொகையின்றி அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 10,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 6,250 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், இணைநோய் இல்லாத 9 பேர் உட்பட 48 பேர் உயிரிழந்தனர். இந்த 48 பேரில், சென்னையில் மட்டும் 17 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். அண்மை நாட்களில் இதுவே அதிகமான உயிரிழப்பாகும். மேற்குவங்கத்திலிருந்து வந்த 22 பேர், ஆந்திராவிலிருந்து வந்த 9 பேர் உட்பட வெளிமாநிலங்களிலிருந்து வந்த 54 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை பெருநகரில், மேலும் 3711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 1029 பேருக்கும், கோயம்புத்தூரில் 686 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. 25 மாவட்டங்களில் மூன்று இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

ஒரே நாளில், 12 வயதுக்குட்பட்ட 411 சிறுவர், சிறுமிகள் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஆளாகியுள்ளனர். சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 79,804 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments