கொரோனா பரவல்: சென்னை மாவட்ட கீழமை நீதிமன்றங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடு
கொரோனா பரவல் காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வக்குமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழமை நீதிமன்றங்களில் நேரடி மனுத்தாக்கல் செய்யும் நடைமுறை நாளை முதல் முழுவதுமாக நிறுத்துப்படுவதாகவும், அதற்கு மாறாக நீதிமன்ற வளாகத்தின் வெளியே வைக்கப்படும் பெட்டிகளில் மனுக்களை போட வேண்டும் என்று அறிவுறித்தப்பட்டுள்ளது.
நேரடி விசாரணைக்கு மூன்று நாட்களுக்கு முன் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் எனவும், சிறப்பு நீதிமன்றங்களில் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே மனுத்தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜாமீன் மனுக்கள் அனைத்தும் காணொலி மூலமாக மட்டுமே விசாரிக்கப்படும் என்றும், அனுமதி சீட்டு இல்லாமல் நீதிமன்ற வளாகத்திற்குள் யாருக்கும் அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments