நீலகிரியில் ஊரடங்கின்போது உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் மோசடி செய்த தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

0 1629

நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கின்போது பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி விடுதி மாணவர்களுக்காக வழங்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்த 2 தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட சமயத்தில் பழங்குடியின மாணவர்களுக்கு உணவு மற்றும் உதவித்தொகை என தலா ரூ.7 ஆயிரத்து 300 வழங்க நிதி வழங்கப்பட்டுள்ளது.

தேவாலா உயர்நிலை உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியசேனன் என்பவரும் பொன்னானி நடுநிலை உண்டு உறைவிடப் பள்ளி தலைமையாசிரியரான சேகர் என்பவரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியை தங்களின் மனைவி, உறவினர், விடுதி சமையலர் போன்றவர்களின் வங்கிக்கணக்கில் மாற்றி மோசடி செய்தனர் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments