தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு 22 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

0 2629
தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு 22 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு 22 மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம்,நாமக்கல், விழுப்பரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை 7 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்க கூடுமென கூறப்பட்டுள்ளது.

தமிழகம் புதுச்சேரியில், ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 80 விழுக்காடு இருக்கும் என்பதால், பிற்பகல் முதல் அடுத்த நாள் காலை வரை வெக்கையாக இருக்கும், மிக அதிகமாக வியர்க்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments