தனியாக வாழ்வதாக கூறி வரதட்சணை கொடுமை வழக்குகளில் இருந்து பெற்றோர் தப்பிக்க முடியாது - உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
தனியாக வாழ்வதாக கூறி வரதட்சணை கொடுமை வழக்குகளில் இருந்து பெற்றோர் தப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கடலூர் மகளிர் நீதிமன்றம், கணவன் மற்றும் கணவனின் பெற்றோருக்கு தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கணவனின் பெற்றோர் மேல் முறையீடு செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஒருபுறம் மகனுடன் வசிக்கவில்லை என்று கூறி தப்பிக்கும் பெற்றோர், மகனுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணையாக பணம் நகைகளை பெறுவதாக நீதிபதி தெரிவித்தார்.
ஒரு குழந்தைக்கு நல்ல கல்வியை வழங்குவதோடு மட்டுமின்றி பொறுப்புள்ள குடிமகனாக வளர்க்க வேண்டியதும் பெற்றோரின் கடமை எனக் கூறிய நீதிபதி, தண்டனையை நிறுத்திவைக்க மறுத்து விட்டார்.
Comments