கூடங்குளம் அணு உலையில் மேலும் 70 பேருக்கு கொரோனா உறுதி..!
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுஉலையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கடந்த 15ஆம் தேதி அணு விஞ்ஞானி ஒருவர் உட்பட 13 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து, கூடங்குளம் அணு உலைகளில் பணியாற்றும் விஞ்ஞானிகள், உயர் அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்களுக்கு, பகுதி, பகுதியாக கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
நேற்றும், இன்றும் ஆர்டீ-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அணு உலைகளின் உயர் அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்களில், 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூடங்குளம் அரசு மருத்துவமனை, செட்டிக்குளம் விஜய் டவுன்ஷிப் கொரோனா தடுப்பு சிறப்பு முகாம், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Comments