காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனக்கு லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் தொற்று உறுதியானதாக டிவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ராகுல் கேட்டுக்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆனந்த் சர்மாவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
After experiencing mild symptoms, I’ve just tested positive for COVID.
— Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2021
All those who’ve been in contact with me recently, please follow all safety protocols and stay safe.
Comments