தெலங்கானாவில் இரவு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவு..!
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தெலங்கானா மாநிலத்தில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
மே ஒன்றாம் தேதி வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்கள், கடைகள், நிறுவனங்கள், உணவகங்களை இரவு 8 மணிக்குள் மூடி விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருந்து கடைகள் உள்ளிட்டவை இயங்கத் தடையில்லை. உத்தரவை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5926 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Comments