இந்தியாவில் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரும் ஜான்சன் அண்டு ஜான்சன்
இந்தியாவில் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியின் 3ஆவது கட்ட பரிசோதனைக்கும், தடுப்பு மருந்து இறக்குமதிக்கும் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம், அனுமதி கோரியுள்ளது.
இந்தியாவில் இதுவரை கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய 3 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவை 2 டோஸ் போட்டுக் கொள்ள வேண்டிய தடுப்பூசிகள் ஆகும்.
இந்நிலையில், ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி ஒரு டோஸ் போட்டுக் கொண்டாலே போதுமானது.
அந்த தடுப்பூசியின் 3ஆவது கட்ட சோதனைக்கும், தடுப்பு மருந்து இறக்குமதிக்கு உரிமம் கோரியும் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
ஜான்சன் அண்டு ஜான்சன் தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், 3 மாதங்களுக்கு சேமித்து வைக்க முடியும்.
Comments