தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையருக்கு கொரோனா உறுதி... இருவரும் வீட்டிலிருந்தே பணி என தகவல்
தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4 மாநில தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த 13ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்ட சுஷில் சந்திராவும், தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமை நிலையில் இருந்து பணியாற்றி வருவதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுஷில் சந்திரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டிலிருந்தே தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Comments