கொரோனா நோயாளிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வரவேண்டாம்: ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் அறிக்கை
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகள் முன்னறிவிப்பின்றி வரவேண்டாம் என மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற மருத்துவமனைகளின் பரிந்துரையின் பேரில் எந்தவித முன்னறிவிப்பின்றி கொரோனா நோயாளிகள் வருவதால், அவர்களுக்கு படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் தயார் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் நோயாளிகளின் உடல்நிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதால், கொரோனா நோயாளிகள் பதிவு செய்து கொண்டு வரும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments