மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்.. மீன்கள், மீன்பிடி உபகரணங்களை அபகரித்து சென்றதாக புகார்..
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கவனிக்க கட்டணம் பெற்ற புகார்... போலீசார் விசாரணை
கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கவனிக்க, கட்டண முறையில் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரொனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக் கொள்வதற்கு உதவியாளர்கள் என்று கூறி சிலர் நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை கட்டணம் பெற்றதும், அவர்களுக்கு மருத்துவமனை ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்திருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக இ.எஸ்.ஐ நிர்வாகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனை வளாகத்தில் இருந்த 17 பேரை போலீசார் வெளியேற்றினர். மேலும் பாலாஜி என்ற கட்டண உதவியாளரை கைது செய்து, கட்டண உதவியாளர்களை அனுப்பி வைக்கும் ஏஜென்டுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments