டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள்
டெல்லியில் ஆறுநாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பெரும் திரளாக மக்கள் குழந்தைகளுடனும் உடைமைகளுடன் திரண்டிருந்தனர்.இடம் கிடைக்காதவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து கூரைகளிலும் ஏறி அமர்ந்தனர்
ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் போன்றவற்றிலிருந்து பல லட்சம் தொழிலாளர்கள் டெல்லியில் பணியாற்றுகின்றனர். கடந்த ஆண்டைப் போல போக்குவரத்து நிறுத்தப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்.
ஆயினும் ரயில்சேவையை நிறுத்தும் எண்ணம் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு அமலில் இருப்பதாலும், பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதாலும் பயணிகள் அதற்கேற்றவாறு பயணத்தைத் திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Comments