பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற உத்தரவு
பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பல இடங்களில் சிலைகள் காரணமாக சமூக ஒற்றுமையும் பாதிக்கப்படுவதோடு, சிலை வைக்கப்பட்டவர்களின் பிறந்தநாள், நினைவுநாளன்று மரியாதை செய்வதாக கூறி கூட்டம் கூடுவதால் போக்குவரத்து பிரச்சினைகள் எழுவதாக மனுதாரர் கூறியிருந்தார்.
சமூகப் பிரச்சினைகள் எழக்கூடாது என்பதால் சில இடங்களில் சிலைகளுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், சிலைகளின் அருகில் இருக்கும் ஏணிகளை அகற்றுவதோடு, புதிதாக சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்டத்தின்படி வழிவகை உள்ளதையும், ஏற்கெனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளதையும் சுட்டிக்காட்டி உத்தரவிட்டது.
Comments