184 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கோரி சென்னை ஐ.ஐ.டி.விண்ணப்பம்..! கொரோனா பரவலுக்கு மத்தியிலும் புதிய கண்டுபிடிப்புகள்

0 2574
184 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கோரி சென்னை ஐ.ஐ.டி.விண்ணப்பம்..! கொரோனா பரவலுக்கு மத்தியிலும் புதிய கண்டுபிடிப்புகள்

டப்பாண்டில் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 184 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கோரி சென்னை ஐ.ஐ.டி. விண்ணப்பித்துள்ளது.

கொரோனா பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு நடுவிலும், புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ள ஐ.ஐ.டி. நிறுவனம், 119 கண்டுபிடிப்புகளுக்கு இந்திய அளவிலும், 65 கண்டுபிடிப்புகளுக்கு சர்வதேச அளவிலும் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது.

இதில் கொரோனா வைரஸை கண்டறியும் தொழில்நுட்பம் அதற்கு தீர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 9 கண்டுபிடிப்புகளும் அடங்கும். 2019-ம் ஆண்டில் 190 கண்டுபிடிப்புகளுக்கும், 2018-ல் 191 கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments