வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது - தலைமை தேர்தல் அதிகாரி

0 4001

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்றும், அது ஒரு கால்குலேட்டர் போல தான் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் சில இடங்களில் வாக்கு எண்ணும் மையங்களில் ஹேக்கிங் முயற்சி நடப்பதாக புகார்கள் வரும் சூழலில், சத்ய பிரதா சாஹு இவ்வாறு கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தபால் வாக்குகளும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் ஒரே நேரத்தில் எண்ணப்படும் என்றும் சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் உள்ளது என்றும், 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதன்முறையாக ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments