சீனாவின் ஆன்ட் குழுமத்தில் இருந்து ஜேக் மாவை வெளியேற்ற நடவடிக்கை
சீனாவின் ஆன்ட் குழுமத்தில் இருந்து ஜேக் மாவை வெளியேற்றும் வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
சீனாவின் மிகப்பெரிய மின்னணுப் பணப் பரிமாற்ற சேவை நிறுவமான ஆன்ட் குழுமம், தொழிலதிபர் ஜேக் மா என்பவரால் நிறுவப்பட்டது.
நூறு கோடிப் பயனாளர்களைக் கொண்ட இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டைச் சீன அரசு எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து ஆன்ட் குழுமத்தில் ஜேக் மாவுக்கு உள்ள பங்கைத் திருப்பிக் கொடுத்து அவரை வெளியேற்றும் வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே நவம்பரில் நடைபெற்ற கூட்டத்தில் ஆன்ட் குழுமத்தில் இருந்து வெளியேறி அதன் நிர்வாகத்தை அரசிடம் ஒப்படைக்க ஜேக் மா ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
Comments