மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி அளிக்க இயலாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

0 3318

மதுரையில் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது.

மனமகிழ் மன்றங்கள், திரையரங்குகள் 50 சதவீதம் பேருடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருவிழாக்களுக்கு மட்டும் முழுமையாக தடை விதிப்பது ஏற்கத்தக்கதல்ல என மனுதாரர் முறையிட்டிருந்தார். அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை, பக்தர்கள் இன்றி நடத்த அனுமதிக்குமாறு மனுதாரர் கோரியிருந்தார்.

கொரோனா மிகத்தீவிரமாக பரவி வரும் சூழலில் இது எவ்வாறு சாத்தியம்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு, வைகை ஆற்றில் நீரே இல்லை, வெறும் குப்பைகளே நிறைந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியது. மிகத்தீவிரமாக கொரோனா பரவும் சூழலில், கட்டுப்பாடுகள் மேலும் அதிகப்படுத்தப்படலாம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்க இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments