கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உடல் நிலையில் முன்னேற்றம் : மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ்
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளருமான முத்தையா முரளிதரன் இதய சிகிச்சைக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் முரளிதரனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Comments