கேரளம், கோவா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரத்துக்கு வருவோருக்கு கொரோனா இல்லை என்கிற சான்றிதழ் கட்டாயம்
கேரளம், கோவா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரத்துக்கு வருவோர் கொரோனா இல்லை என்கிற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக அளவில் கொரோனா பாதிப்புள்ள மகாராஷ்டிர மாநிலத்தில், அதைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாகக் கேரளம், கோவா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், உத்தரக்கண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் இருந்து மகராஷ்டிரத்துக்கு வருவோர் கொரோனா இல்லை எனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
இந்தச் சான்றிதழை அவர்களின் பயணத்தைத் தொடங்கும் முன் 48 மணி நேரத்துக்குள் பெற்றிருக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இந்தக் கட்டுப்பாட்டை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments