இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,619 பேர் உயிரிழப்பு

0 3000
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,619 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு மேலும் ஒரு புதிய உச்சம் தொட்டு, 2 லட்சத்து 73 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை தொடங்கிய பிறகு, கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரேநாளில் பெருந்தொற்றுக்கு ஆயிரத்து 619 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 178 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 19 லட்சத்து 29 ஆயிரத்து 329 பேர் சிகிச்சையில் உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரப்படி இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 30 லட்சத்தை நெருங்குகிறது.

இதுவரையிலான மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 78 ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 12 கோடியே 38 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு கடந்த 5ஆம் தேதி ஒரு லட்சத்தையும், கடந்த 15ஆம் தேதி 2 லட்சத்தையும் தாண்டியது. தினசரி பாதிக்கப்படுவோர் விகிதம் 12 நாட்களில் இரட்டிப்பாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments