கொரோனா பரவல் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் பங்குகள் விலை வீழ்ச்சி
கொரோனா பரவல் அதிகரிப்பின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கப் பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் எதிரொலியாகப் பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகநேரத் தொடக்கம் முதலே வீழ்ச்சி ஏற்பட்டது. 9.40 மணியளவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1409 புள்ளிகள் சரிந்து 47 ஆயிரத்து 423 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை நிப்டி 392 புள்ளிகள் சரிந்து 14 ஆயிரத்து 226 ஆக இருந்தது.
தனியார் வங்கிகளின் பங்கு விலை 5 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது.
Comments