செமஸ்டர் தேர்வை மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் - அண்ணா பல்கலைக்கழகம்
பொறியியல் செமஸ்டர் தேர்வில், மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதவும், இணையத்தை பயன்படுத்திக் கொள்ளவும் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
அண்மையில் வெளியான தேர்வு முடிவுகளில் பாதிக்கும் மேலான மாணவர்கள் தோல்வியுற்ற நிலையில், ஆப்ஷன்களுடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் வாட்ஸ் அப் மூலம் பதிலைக் கண்டறிய முயற்சித்ததாகவும், அவற்றை முறைகேடாக கருதி தேர்வில் பெயில் போட்டதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் செமஸ்டர் தேர்வில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, நேரடி விடைகளை கொண்ட கேள்விக்கு பதில், பாடங்களை புரிந்து பதிலளிக்கும் வகையில் விளக்க வகை சார்ந்த கேள்விகள் அடங்கிய வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளது.
இதற்காக மாணவர்கள் தேர்வின் போதே புத்தகத்திலும், இணையத்திலும் எடுத்துக்காட்டுகளை தேடி அறிந்து விடையளிக்கலாம். இந்த புதிய தேர்வு முறை, இறுதி செமஸ்டர் மாணவர்கள் தவிர பிற ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும்.
Comments