ஈராக்கில் அமெரிக்கப்படைகளைக் குறிவைத்து ராக்கெட் குண்டு தாக்குதல் - 5 பேர் படுகாயம்

0 1271
ஈராக்கில் அமெரிக்கப்படைகளைக் குறிவைத்து ராக்கெட் குண்டு தாக்குதல் - 5 பேர் படுகாயம்

ராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கப் படையினரைக் குறி வைத்து ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதில் 5 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

தலைநகர் பாக்தாத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பலாத் விமான நிலையத்தை தனது படைத்தளமாக அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.

மேலும் எஃப் 16 ரக விமானங்கள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு விமானப்படைத் தளத்தின் மீது அடுத்தடுத்து 5 ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன.

இந்தத் தாக்குதலில் 3 ஈராக் வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments