பயணிகளின் கொரோனா நெகட்டிவ் சான்றை சரிபார்க்காத 4 விமான நிறுவனங்கள் மீது டெல்லி காவல் துறை வழக்குப் பதிவு

0 2264
பயணிகளின் கொரோனா நெகட்டிவ் சான்றை சரிபார்க்காத 4 விமான நிறுவனங்கள் மீது டெல்லி காவல் துறை வழக்குப் பதிவு

விமானத்தில் பயணிக்கும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றை சரிபார்க்காத 4 விமான நிறுவனங்கள் மீது டெல்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

டெல்லிக்கு விமானத்தில் வரும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்று அவசியம் என அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்நிலையில் சில பயணிகள் அந்தச் சான்று வைத்திராமல் போனதால் அவர்கள் பயணித்த இண்டிகோ, விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஏர் ஆசியா ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ளது.

டெல்லி பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments