மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தல்

0 1498
மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளை தனிமைப்படுத்தி வைக்கும் படி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளை தனிமைப்படுத்தி வைக்கும் படி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் அதற்கென பிரத்யேக கட்டிடங்களை பயன்படுத்த வேண்டும் எனவும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் பிரத்யேக வழித்தடத்தை உருவாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள், அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வகங்கள் உள்ளிட்டவைகள் அவசியம் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments