தனியார் பின்னலாடை நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்ட 19 இளம் பெண்கள் போலீசாரால் மீட்பு
திருப்பூரிலுள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் கொத்தடிமைகளாக அடைத்து வைத்து வேலை வாங்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்த 19 இளம் பெண்களை போலீசார் மீட்டனர்.
வேலம்பாளையம் பகுதியில் ஜேப்ஸ் (JABS) என்ற பெயரில் ஒடிசாவைச் சேர்ந்த நந்தா என்ற நபர் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார்.
தனது நிறுவனத்தில் வேலை செய்வதற்காக ஒடிசாவிலிருந்து 30க்கும் மேற்பட்ட இளம் பெண்களை அழைத்து வந்து மிகக்குறைந்த கூலிக்கு பணியமர்த்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண்களில் சிலர், அதிக கூலி தரும் வேறு சில நிறுவனங்களுக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து மீதமுள்ள பெண்களும் சென்று விடக் கூடாது என அவர்களை அறை ஒன்றில் பூட்டி வைத்து, உணவு மட்டும் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்தப் பெண்களில் ஒருவர் ரகசியமாகக் கொடுத்த தகவலின் பேரில் வந்த போலீசார், 19 பெண்களை மீட்டு, நந்தாவிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments