முதலமைச்சர் ஆலோசனை.. முக்கிய அறிவிப்புகள் வரலாம்..!
கொரோனா பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனைத்துத்துறை முதன்மை செயலாளர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். அன்று மாலையே முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பசுமைவழிச்சாலையிலுள்ள முகாம் அலுவலத்தில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இதனால் புதிய கட்டுப்பாடுகள் குறித்தும் இரவு நேர ஊரடங்கு குறித்தும் முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments