சென்னையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்: மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னையில் உணவகங்களில் பார்சல் மட்டுமே வாங்கிச் செல்லும் வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்றும் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தொலைபேசி ஆலோசனை மையம் மற்றும் 100 தொலைபேசி இணைப்புகள் கொண்ட கொரோனா கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த மையத்தைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். இந்த மையத்தைத் தொடங்கி வைத்த ஆணையர் பிரகாஷ் அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும், அவரது இறப்புக்கும் தொடர்பு இல்லை எனத் தெரிவித்தார்.
கொரோனா குறித்துச் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்புவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனக் குறிப்பிட்ட அவர், மன்சூர் அலிகான் மீது புகார் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். உணவகங்களில் இனி பார்சல் மட்டுமே வாங்கிச் செல்லும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
Comments