அர்ஜென்டினாவில் இரவுநேர ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்; பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
அர்ஜென்டினாவில் கொரோனா பரவலை குறைப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்நாட்டில் 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு போடப்பட்ட ஊரடங்கிற்கு இடையே அளிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளால் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், நோய் பரவலை தடுக்க அங்கு இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பியூனஸ் அயர்ஸில் திரண்ட மக்கள், ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர்.
Comments