தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களை சேர்ந்த நீதிபதிகள் 51 பேர் இடமாற்றம் - உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவிப்பாணை வெளியீடு

0 1385
தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களை சேர்ந்த நீதிபதிகள் 51 பேர் இடமாற்றம் - உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவிப்பாணை வெளியீடு

மிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 51 பேரை இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் வங்கி மற்றும் நிதி நிறுவன மோசடி தொடர்பான சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜவஹர் கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஏற்கெனவே வகித்த பொறுப்புக்கு விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் முதலாவது நீதிபதி பதவி காலியாக இருந்த நிலையில், இரண்டாவது நீதிபதி ரவி முதலாவது நீதிபதியாகவும், விழுப்புரம் மாவட்டம் கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் இரண்டாவது நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments