ஓமலூர் கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை

0 6293
ஓமலூர் கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் வாக்கு எண்ணும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக கட்சி முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் எவ்வாறு பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கட்சி நிர்வாகிகள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments