”கும்பமேளா சென்று திரும்பியவர்களுக்கு 14 நாட்கள் வீட்டுச் சிறை கட்டாயம்” -டெல்லி அரசு நடவடிக்கை
கும்பமேளா சென்று திரும்பியவர்களை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி வைப்பது டெல்லியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி அரசு வெளியிட்ட அரசாணையில், கும்பமேளாவில் கொரோனா பரவியதன் பாதிப்பு காரணமாக அங்கிருந்து டெல்லிக்கு வருகிறவர்கள் தங்களைத் தாங்களே 14 நாட்கள் வீட்டுக்குள் அடைத்துக் கொள்வது கட்டாயமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் இம்மாத இறுதி வரை கும்பமேளாவில் பங்கேற்க செல்வோர் தங்கள் விவரங்களை இணையத்தில் பதிவு செய்யவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
Comments