கும்பமேளாவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை..! பிரதமரின் கோரிக்கையை ஏற்று இன்றுடன் நிகழ்ச்சி நிறைவு பெற வாய்ப்பு
கும்பமேளாவில் கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்த நிலையில் இன்றுடன் கும்பமேளா திருவிழா நிறைவு பெறக்கூடும் என்று கூறப்படுகிறது.
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் நடக்கும் கும்பமேளாவில் புனித நீராடிய சாதுக்கள் , பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, மக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, கும்பமேளாவை நிறைவு செய்துள்ளதாக, துறவியர்களின் இரண்டு பெரிய அமைப்புகள் அறிவித்துள்ளன.
இதனால், ஹரித்வாரிலிருந்து, பல லட்சம் பேர் வெளியேறத் துவங்கியுள்ளனர். துறவியர் அமைப்புகள் சம்மதித்தால், கும்பமேளாவை உடனடியாக நிறைவு செய்யத் தயாராக இருப்பதாக, உத்தரகண்ட் அரசு தெரிவித்துள்ளது.
Comments