மேற்கு வங்க மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது 5 ஆம் கட்ட தேர்தல்..! 45 தொகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பு

0 1561
மேற்கு வங்க மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது 5 ஆம் கட்ட தேர்தல்..! 45 தொகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பு

மேற்கு வங்கத்தில் ஐந்தாம் கட்டமாக 45 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

294 உறுப்பினர் கொண்ட மேற்கு வங்கச் சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. ஐந்தாம் கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்கள் கொரோனா விதிகளைப் பின்பற்றி வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். நான்காம் கட்டத் தேர்தலின்போது வாக்களிக்க வந்தவர்களை மத்தியப் படையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாகத் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில் இன்று மத்தியப் படையினருடன், மாநிலக் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments