வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2623
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்

ளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஏப்ரல் 20, 21 ஆகிய நாட்களில் வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் உட்புற மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக விருதுநகர், திருவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், பெண்ணாகரம் ஆகிய இடங்களில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments